சாலைகிராமத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் இல்லை - கிராம மக்கள் புலம்பல்

சாலைகிராமத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் இல்லை - கிராம மக்கள் புலம்பல்

சிலிண்டர்

சாலைகிராமத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளானர்.

இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமம் சுற்று வட்டார கிராமங்களில் வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதில்லை. மாறாக குறிப்பிட்ட நாளில் வாடிக்கையாளர்கள் ரோட்டில் காத்திருந்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

சாலைக்கிராமம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பரமக்குடி, இளையான்குடி பகுதிகளில் இருந்து காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டது. பதிவு செய்து நீண்ட நாட்கள் கழித்தே சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். தற்போது சாலைக்கிராமம் சுற்று வட்டார கிராம பகுதிகளான வடக்கு சாலைக்கிராமம்,வலசை காடு, அய்யம்பட்டி, நரிப்பொட்டல், வண்டல், சீவலாகி, சூராணம், தெற்கு கீரனுார், வடக்கு கீரனுார்,

சிறுபாலை, முத்துார், மாடக்கோட்டை, அரியாண்டிபுரம், தரிக்கொம்பன், கோட்டையூர், சாத்தனுார், பூலாங்குறிச்சி, கல்வெளிபொட்டல், கருஞ்சுத்தி, கரும்புகூட்டம் உள்ளிட்ட கிராம பகுதிக்கு சூராணம்,

இளையான்குடி, பரமக்குடி, நயினார் கோயில் உள்ளிட்ட ஊர்களிலிருந்து காஸ் ஏஜன்சி மூலம் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த சிலிண்டரை வீடுகளுக்கு நேரடியாக வினியோகம் செய்வதில் குளறுபடி உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story