தமிழக மக்களை யாரும் அச்சுறுத்த முடியாது - சபாநாயகர் அப்பாவு

தமிழக மக்களை யாரும் அச்சுறுத்த முடியாது - சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

கலைஞர் மகன் ஆட்சியில் உள்ளார், மக்களுக்கும், உண்மைக்கும், நியாயத்துக்கும் பயப்படுவாரே தவிர மிரட்டலுக்கு பயப்பட மாட்டார் என சபாநாயகர் அப்பாவு கொடைக்கானலில் தெரிவித்தார்.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிற்கு வருகை புரிந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால் ஜூன் 6 வரை சட்ட மன்ற கூட்டத்தொடர் இருக்காது எனவும் அரசு நிகழ்ச்சிகளிலும் நாங்கள் கலந்து கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார், மேலும் 6 ஆம் தேதி சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் எனது குடும்பத்தினர் மலர் கண்காட்சியை காண வேண்டும் என சொன்னதால் இங்கு குடும்பத்தினருடன் வந்துள்ளேன் என தெரிவித்தார்,

மேலும் தமிழ்நாட்டில் தமிழக மக்களை யாரும் அச்சுறுத்த முடியாது தமிழ் தோன்றியது முதல் கொள்கை அடிப்படையில் இருக்க கூடிய கட்சி பயப்பட கூடியவர்கள் ஆட்சியில் இல்லை , கலைஞர் மகன் ஆட்சியில் உள்ளார், மக்களுக்கு உண்மைக்கு நியாயத்துக்கு பயப்படுவார்களே தவிர மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்கள், பாரத பிரதமர் அவர்கள் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும், நேற்று சொல்வதை இன்று மாற்றி பேசுவதை பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

நேரில் நான் பார்த்ததில்லை, பாரத பிரதமர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பிரதமர், ஜாதி, மத, இனம் எதுவுமே கிடையாது, தமிழக முதல்வர் எப்படி அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருக்கிறாரோ அதுபோல் பாரத பிரதமர் அனைவருக்கும் உண்டான பிரதமராக இருக்க வேண்டும், அவருக்கு வயதான காரணத்தால் மாற்றி மாற்றி பேசுகிறார், நியூஸ் 18 இல் பேட்டி கொடுக்கும் போது நான் ஒருவன் தான் எல்லாவற்றிற்கும் பதில் பதில் சொல்ல வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்,

வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது களத்தில் உள்ளவர்கள் அவர் அவர் கருத்தை சொல்வார்கள் எனவும், பாஜக வெற்றி பெற்றால் ஜனநாயகம் இருக்காது என ராகுல் காந்தி சொல்லியுள்ளார் என்ற கேள்விக்கு ஜனநாயகம் தற்போது உள்ளதா என பதில் கேள்வி எழுப்பினார், பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் யார் பயன் பெற்றார்கள் என கேள்வியும் எழுப்பினார், கார்பரேட் கம்பெனி கடன் தள்ளுபடி பெற்று பலன் பெறுகிறது, உலக பணக்காரர் பட்டியலில் 4 வது இடத்தில் இருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி பண்ண வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை எனவும் தெரிவித்தார், மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கு எந்த தள்ளுபடியும் கிடையாது அவர்கள் பாதிக்கும் நிலைமையே உள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story