இனி அருப்புக்கோட்டைக்கு பெண் கொடுக்க யாரும் பயப்பட மாட்டார்கள்...!

இனி அருப்புக்கோட்டைக்கு பெண் கொடுக்க யாரும் பயப்பட மாட்டார்கள்...!

இனி அருப்புக்கோட்டைக்கு பெண் கொடுக்க யாரும் பயப்பட மாட்டார்கள் என பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

இனி அருப்புக்கோட்டைக்கு பெண் கொடுக்க யாரும் பயப்பட மாட்டார்கள் என பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ 1,000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு என பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பொங்கல் பரிசுத்தொகை முதலில் வருமான வரி செலுத்துவோர்களுக்கு இல்லை என கூறப்பட்டது இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம் உடனடியாக அவர் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்டார். அதேபோல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விட்டு போனவர்களுக்கு இந்த மாதம் மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. விடுபட்ட தகுதியானவர்கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். முதலமைச்சரை பொறுத்தவரை யார் மத்தியிலும் பாரபட்சம் கிடையாது. முதலமைச்சருக்கு அதிமுக பாஜக என எந்த கட்சி பாகுபாடும் கிடையாது அனைவரும் தமிழ்நாட்டு மக்கள்தான். அவருடைய சகோதர சகோதரிகள் தான். அதன் அடிப்படையில் தான் அனைவருக்கும் ரூபாய் 1,000 மும் பொங்கல் பரிசுத்தொகுப்பம் வழங்கப்படுகிறது.

புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது மார்ச் மாதம் முதல் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உரிமை இருக்காது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் விருதுநகர் சாத்தூர் அருப்புக்கோட்டை மூன்று நகராட்சிகளுக்கும் புதிய தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் அதனை தொடர்ந்து தண்ணீர் பிரச்சினை என்பது இனி இருக்காது. இனி அருப்புக்கோட்டைக்கு பெண் கொடுக்க யாரும் பயப்பட மாட்டார்கள். நம்ம அண்ணாச்சி என்ற உரிமையை என்றும் விட்டு தர மாட்டேன். நல்ல மழை பொழிகிறது நல்ல ஆட்சி நடக்கிறது என பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வருவாய் துறை அதிகாரிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story