திருப்பூரில் சாலையின் நடுவே நோ பார்க்கிங் ஃபோர்டு சர்ச்சை!!

திருப்பூரில் சாலையின் நடுவே நோ பார்க்கிங் ஃபோர்டு சர்ச்சை!!

நோ பார்க்கிங் ஃபோர்டு

திருப்பூர் காவேரி வீதி சாலை நடுவே பார்க்கிங் ஃபோர்டு சர்ச்சை தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர்: சாலையின் நடுவே நோ பார்க்கிங் ஃபோர்டு சர்ச்சை. திருப்பூர் மாநகர் காவேரி வீதி பகுதியில் சாலையின் குறுக்கே நடுவில் நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சாலையின் நடுவில் நோ பார்க்கிங் போர்டு அமைக்கப்பட்டதாக பரவியது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இந்தப் பகுதியில் ஏராளமான லாரி புக்கிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக சரக்கை ஏற்ற மற்றும் இறக்க வரும் லாரிகள் சாலை ஓரம் நின்று பெரும் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்துவதாகவும் பலமுறை தெரிவித்தும் வாகனங்களை அப்புறப்படுத்த மறுப்பதால் சாலை அமைக்கும் பொழுது இது போன்று தங்களுக்கு நோ பார்க்கிங் போர்டுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு அமைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story