தரை தள குடியிருப்புவாசிகளுக்கு விடுபட்டதா நிவாரணம்?
அமைச்சர் ஆய்வு
தரை தள குடியிருப்புவாசிகளுக்கு விடுபட்டதா நிவாரணம்?
'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த மழையால், ஆலந்துார் மண்டலத்தின் ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுாரில் நேருநகர் உள்ளிட்ட பல தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது. இதையடுத்து, சென்னை நகரில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
ஆலந்துார் மண்டலத்தின் சில பகுதிகளில், நிவாரண நிதிக்கான 'டோக்கன்' வீடு வீடாக வழங்கப்பட்டது. பல பகுதிகளில், பொது இடங்களில் வழங்கப்பட்டது. இந்நிலையில், வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் வசிக்கும் பலருக்கு நிவாரண நிதி கிடைத்துள்ளது. ஆனால், வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட தரை தளத்தில் வசிக்கும் பலருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Tags
Next Story