செக்யூரிட்டி பணியிடம் காலி விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறி

செக்யூரிட்டி பணியிடம் காலி விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறி

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் செக்யூரிட்டி இல்லாததால் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் செக்யூரிட்டி இல்லாததால் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு காலை, மாலையில், ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி கல்லுாரி மாணவ- - மாணவியர் தடகளம், ஜூடோ, இறகுபந்து, டென்னிஸ், வாள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பயிற்சி பெற தினமும் நுாற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர். மாணவ- - மாணவியர் அதிகளவு வந்து செல்லும் மாவட்ட விளையாட்டு அரங்கில், இரவு நேர செக்யூரிட்டி மட்டுமே பணியில் உள்ளார். ஆனால், பகல் நேர செக்யூரிட்டி பணியிடம் காலியாக உள்ளதால், விளையாட்டு அரங்கிற்குள் விளையாட்டு வீரர், வீராங்கனையர் தவிர வெளிநபர்களும் மாவட்ட அரங்கத்திற்குள் அத்துமீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சூழல் உள்ளது. மேலும், மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு பல்வேறு பயிற்சிக்காக வந்து செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவியர், வீராங்கனையரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story