நோபல் உலக சாதனை: 6 மாணவர்களுக்கு சான்றிதழ்
பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 'மண் காப்போம்' என்பதை வலியுறுத்தி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஹாசினி, தக்ஷித், ராஜ்வீர், ஜெயகீர்த்தன், நான்காம் வகுப்பு பயிலும் பிரஜ்வல், ஐந்தாம் வகுப்பு பயிலும் சுகவிஷ் ஆகிய ஆறு பேரும் தற்காப்பு கருவிகளான சுருள்வாள், கத்தி, சிலம்பம், மான் கொம்பு ஆகியவற்றை சுற்றிக் கொண்டும் தேசிய கொடியை கையில் வைத்துக் கொண்டும் மண் காப்போம் என்ற விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறும் ஒரு மணி நேரம் சுற்றி வந்து உலக சாதனை படைத்தனர்.
நோபல் நிறுவனத்தில் இருந்து டாக்டர் அரவிந்த் தலைமையிலான நோபல் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்த பின், ''ஐந்து சிறுவர்கள் ஒரு சிறுமி ஆகிய 6 பேரும் சிலம்பம் மற்றும் தற்காப்பு கருவிகளை சுற்றிக்கொண்டு தொடர்ந்து ஒருமணி நேரம் இடைவிடாது 10.5 கிலோ மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் செய்து நோபல் உலக சாதனை படைத்துள்ளனர்' என்று அறிவித்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ், கேடயங்களை வழங்கினர்