நொச்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

நொச்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
X
பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராத்தில், பள்ளிக்கல்வித்துறையில் உத்தரவுபடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி , வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி , ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பள்ளிகளில் மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் மாணவர்களின் கல்விகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story