தமிழக மக்கள் நலக் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழக முழுவதும் மார்ச் 20ம் தேதி துவங்கியது.
மேலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் 2வது நாளான இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் நலக் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு சாத்தூர் அருகே உள்ள நல்லான்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்கண்ணு (58) என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார் மேலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது
