நகை கடனை ரத்து செய்யாமல் அலைக்கழிப்பு - வங்கி நிர்வாகிகளுக்கு அபராதம்

நகை கடனை ரத்து செய்யாமல் அலைக்கழிப்பு - வங்கி நிர்வாகிகளுக்கு  அபராதம்
நுகர்வோர் நீதிமன்றம் 
விவசாய நகை கடனை ரத்து செய்யாமல் அலைக்கழித்த கூட்டுறவு வங்கி நிர்வாகிகளுக்கு 50,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் சின்னதாதாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசி ரெட்டியபட்டி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை விவசாய கடன் என்ற அடிப்படையில் ரூபாய் ஒரு 126000/- ஆயிரம் என்ற தொகைக்கு அடமானம் வைத்துள்ளார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு கடன் தவணை காலம் முடிவடைந்ததால் கடனை செலுத்துவதற்கு விஜயா வங்கிக்கு சென்றபோது வங்கி அதிகாரிகள் விவசாய கடன்களுக்கு உரிய வட்டியை விட அதிக அளவு வட்டி கேட்டதாகவும் வட்டித் தொகையை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடப்போவதாகவும் தன்னை மிரட்டியதாகவும் மேலும் 2021 ஆம் ஆண்டு விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்த போதிலும் அது தொடர்பாக எவ்வித பதிலும் வங்கி தரப்பு சார்பில் அளிக்கப்படவில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜயா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தில் நடைபெற்று வந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சக்கரவர்த்தி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில் விவசாய கடன் என்று பெற்ற கடன் தொகையை சாதாரண கடன் தொகை என்று மாற்றி அதிக அளவு வட்டி பணம் கேட்டு நுகர்வோருக்கு மிரட்டல் விடுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விஜயாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கிற்கான தொகையை சேர்த்து ரூபாய் 50,000 மற்றும் அடமான வைத்துள்ள 68 கிராம் நகை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்றும் அபராத தொகையை 6 வார காலத்திற்குள் வழங்காவிட்டால் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்

Tags

Next Story