15 நாட்களாக விநியோகிக்கப்படாத குடிநீர் - பொதுமக்கள் சாலைமறியல்

15 நாட்களாக விநியோகிக்கப்படாத குடிநீர் -  பொதுமக்கள் சாலைமறியல்

சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி பத்மநாபபுரம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தின் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே திருத்தணி- அரக்கோணம் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் குடிநீர் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story