நிற்காத பேருந்துகள் - பொதுமக்கள், காங்கிரசார் மறியல்
குமரி மாவட்டம் பொன்மனை பகுதியில் விஜய் வசந்த் எம் பி யின் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாலையின் எதிர்ப்புறத்தில் பொதுமக்கள் அமைத்த நிழற்குடை ஒன்று உள்ளது.
நாகர்கோவில் - குலசேகரம் செல்லும் வாகனங்கள் விஜய் வசந்த் எம்பி அமைத்த நிழலகத்திலும், குலசேகரத்தில் இருந்து நகர் கோவில் மார்க்கம் செல்லும் பேருந்துகள் பொதுமக்கள் அமைத்துள்ள நிழற்குடை யிலும் பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக அரசு பேருந்துகள் விஜய் வசந்த் எம்பி அமைத்த நிழலகம் முன்பு நிற்பதில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் நேற்று மறியல் போராட்டத்துக்காக பொன்மனை பகுதியில் குவிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்துக்கு மக்கள் குவிந்ததை கண்ட அரசு பேருந்துகள் உடனடி அங்கு நின்று பயணிகளை ஏற்றி சென்றன. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.