புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயல்பு கூட்டம்
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயல்பு கூட்டம்
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இம்மாதத்திற்கான இயல்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக உள்ளதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதேபோல் திருமயம் முதல் ராயவரம் வரை தினமும் மூன்று முறை இயக்கப்படும் பேருந்து ஒருமுறை தான் இயக்கப்படுகிறது. என்றும் ஆகவே சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் அந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் ஏற்றப்பட்டன.
Next Story