காங்கேயத்தில் விஷப்பூச்சி கடித்து வடமாநில தொழிலாளி பலி

காங்கேயத்தில் விஷப்பூச்சி கடித்து வடமாநில தொழிலாளி பலி

பைல் படம் 

காங்கேயத்தில் விஷப்பூச்சி கடித்து வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

பீகார் மாநிலம், நவதா மாவட்டத்தை பாபுநூர் கிராமத்தை சேர்ந்தவர் கிஷோரி ரவிதாஸ் வயது 43. இவரது மகன் லவ்குஷ்குமார் வயது 23. இவர் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு நண்பர்களுடன் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் லவ்குஷ்குமார் தான் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அப்போது அவரது காலில் ஏதோ ஒரு பூச்சி கடித்ததை போல் உணர்ந்துள்ளார்.‌ உடனே அறைக்கு சென்ற உடன் தங்கிஇருந்தவர்களிடமும், கம்பெனி மேற்பார்வையாளரிடமும் நடந்ததை கூறியுள்ளார். மேலும் லவ்குஷ்குமாரின் கால் வீங்கத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமாகி நேற்று இரவு 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லவ்குஷ்குமார் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இந்த இறப்பு குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story