போதைப்பொருட்களை கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!

கைது
திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த காரை மடக்கி சாதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், விமல் போன்ற புகையிலை பொருட்கள் 102 கிலோ இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த காரையும், 102 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், இதனை கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சட்ராராம்(35) மற்றும் தயாராம்(22) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவித்தனர். ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆவடி முழுவதும், ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபிபாஷா(40) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அந்த வீட்டை சோதனை நடத்திய தனிப்படை போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனை செய்யும் சபிபாஷா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.