மூச்சுத் திணறலால் உயிரிழந்த வடமாநில இளம்பெண்: காவல்துறை வழக்கு பதிவு

மூச்சுத் திணறலால் உயிரிழந்த வடமாநில இளம்பெண்: காவல்துறை வழக்கு பதிவு

வடமாநில இளம்பெண் பணிபுரிந்த நிறுவனம்

அரவக்குறிச்சி அருகே மூச்சுத் திணறலால் வடமாநில இளம்பெண் உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பட்ராம் தர்சுலி மனைவி ரைப்பெர்ரி தர்சுலி வயது 26. இவர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மணல்மேடு பகுதியில் செயல்படும் டெக்ஸ் பார்க் அருகே உள்ள KTPL பெண்கள் விடுதியில் தங்கி தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2- மாதங்களாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆயினும், ஏப்ரல் 11-ம் தேதி அதிகாலை 5:30-மணி அளவில், திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த ரைப்பெர்ரி தர்சுலி-யின் சகோதரர் மங்கல்சிங் தர்சுலி இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ரைப்பெர்ரி தர்சுலி-யின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags

Next Story