ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் 6 வது மாடியில் இருந்து வட மாநில வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 56 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 7 அடுக்கு மாடி கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் 6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 56 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடமாக ஏழு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை GMS கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சார்பில் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெஸ்ட் பெங்கால் பகுதியை சார்ந்த முகமது இஸ்மாயில் மகன் அபுதாகிர் (19) என்கிற வாலிபர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் ஆறாவது அடுக்கு மாடியில் கட்டிடத்திற்கு பூசு வேலை செய்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென நிலை தடுமாறிய வாலிபர் மேலே இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் கண்ணகி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வரும் வட மாநில வாலிபர்களுக்கு உண்டான பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்றார். இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தில் வடமாநில இளைஞர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேலை செய்து வருகின்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்பந்ததாரரின் மெத்தனப் போக்கை கண்டு கொள்ளாமல் விட்டதின் காரணமாக தற்பொழுது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முறையாக நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

Tags

Next Story