கஞ்சா விற்ற வட மாநில தொழிலாளி கைது

கஞ்சா விற்ற வட மாநில தொழிலாளி கைது

கஞ்சா விற்ற வட மாநில தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் கஞ்சா விற்ற வட மாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த நல்லி கவுண்டன் வலசிலூள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த திலிப் குமார் வயது 44. இவர் சமீப காலமாக அப்பகுதியில் தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் காங்கேயம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு திலீப் குமார் தங்கிருந்த வீட்டில் சோதனை செய்ததில் 100 கிராம் அளவு கஞ்சாவுடன் திலீப் குமாரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story