மாறாமலையில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை
மாறாமலையில் வடமாநில தொழிலாளி மரத்தில் தொங்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேஸ் ஓரான் (37). இவருக்கு மனைவியும் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது பிள்ளைகளை ஊரில் விட்டு விட்டு மனைவியுடன், குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த மாறாமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கிராம்பு எஸ்டேட்டுக்கு கிராம்பு பறிக்கும் வேலைக்கு வந்திருந்தார்கள். இந்த நிலையில் ராஜேஸ் ஓரான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி அப்பகுதியினருடன், அந்த பகுதிகளில் தேடிபார்க்கும் போது இன்று ராஜேஷ் ஓரான் ஒரு மரக்கிளையில் தூக்கில் பிணமாக காணப்பட்டார். உடனே அருகில் உள்ளவர்களின் உதவியுடன் அவரை இறக்கி பார்க்கும் போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story