வடமாநில தொழிலாளர்களை தாக்கி மீண்டும் செல்போன் பறிப்பு

வடமாநில தொழிலாளர்களை தாக்கி மீண்டும் செல்போன் பறிப்பு

செல்போன் பறிப்பு

ராணிப்பேட்டை அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கி மீண்டும் செல்போன் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-பெங்களூரு இடையே ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இதற்காக தனியார் நிறுவனம் ஒன்று உளியநல்லூர் பகுதியில் முகாம் அமைத்துள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவலாளியாக இருந்த பீகாரை சேர்ந்த மனோஜ் பாண்டே இரவு பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் மனோஜ் பாண்டேவை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், கம்பிகளை பறித்து சென்று விட்டனர். இது தொடர்பாக சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தை சார்ந்த சுகுமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உளியநல்லூர் பகுதியில் சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணி நடைபெறும் இடத்தில் தளவாட பொருட்களை பாதுகாக்கும் பணியில் உத்தரபிரதேசம் மாநிலம் அசன்பூர் பகுதியை சார்ந்த ஜீத்பால், பவன்குமார், ஜெகத்வீர், அரிஸ்சந்த் ஆகியோர் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி அரை நிர்வாணப்படுத்தி தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 2 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிேயாடி விட்டனர்.இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story