புகையிலை பொருட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது
புகையிலை பொருட்கள்
குமாரபாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டு, பொலிரோ வாகனம், பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இடைப்பாடி சாலை, தனியார் மில் அருகே இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் 10 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வாகனத்தில் வந்த சோழாப்பூரை சேர்ந்த கணேஷ், (29), என்பவர் கைது செய்யப்பட்டார்.
Next Story