நண்பரை பீர் பாட்டிலால் குத்திய வட மாநில வாலிபர் கைது

நண்பரை பீர் பாட்டிலால் குத்திய வட மாநில வாலிபர் கைது
பைல் படம்
வன்னியூரில் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் நண்பரை பீர் பாட்டிலால் குத்திய வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வன்னியூர் பகுதியில் ஒரு தனியார் முந்திரி ஆலை அமைந்துள்ளது. இந்த அறையில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நவாஸ் ஷா மகன் முன்னாஷா (24) மற்றும் ராம் பிரசாத் மகன் தீபக் பிரசாத் (25) ஆகியோர் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். நண்பர்களாகிய இருவரும் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடித்து அறைக்கு சென்றனர். பின்னர் இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முன்னாஷா அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தீபக் பிரசாத்தை கழுத்தில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீப பிரசாத் அலறினார். அவர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீபக் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் பளு கல் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னா ஷாவை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story