செல்போன் திருடிய வடமாநில வாலிபர் கைது

செல்போன் திருடிய வடமாநில வாலிபர் கைது

கைது

ஆரணி பழைய பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட,ம் ஆரணி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறிய பயணியிடம் விலை உயர்ந்த செல்போனை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நோனியா (வயது 22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story