கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரியில் வட மாநிலத்தவர் பலி
காவல் நிலையம்
கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரியில் வட மாநிலத்தவர் பலியானர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் கல் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வட மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் கரக்.
இவர், மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் கல்குவாரியில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று பணியில் இருந்த போது வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அவரது அறைக்குச் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடன், சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு மருத்துவர் பரிசோதித்தபோது அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story