காங்கிரஸ், பாஜ ஆட்சியில் ஒரு நலத்திட்டமும் முழுமையடையவில்லை - சீமான்
ஆட்சி ஆளும்போது நேர்மை இல்லை என்ற காரணத்திலேயே கூட்டணிகளை ஆண்ட கட்சிகள் தேடுகிறது எனவும் ,தேர்தல் புறக்கணிப்பு என்பதை தவிர்த்து விட்டு, பிரச்சனைகளை இன்று முன்னின்று தீர்வு காண்போம் என்ற கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
தமிழக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 13 நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை தொடர்ந்து காலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர் பிரச்சை கடும் வெயிலினை பொறுப்படுத்தாது பிரசாரம் செய்து வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையேதீவிர வாக்கு சேகரித்தார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபட்ட சீமான், கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவும் அதற்கு முன்பும் காங்கிரசும் நம்மை ஆண்ட நிலையில் இதுவரையிலும் எந்த ஒரு நல திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தவில்லை எனவும், தமிழகத்தில் உள்ள திமுக கடந்த தேர்தலில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தும் எந்த ஒரு நல திட்டங்களையும் செயல் படுத்தவில்லை என்பதும், பிரச்சனைகள் பேசி தீர்வு கண்டதும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
பாஜக அதிமுக திமுக காங்கிரஸ் என நான்கு கட்சிகளும் ஆண்ட கட்சிகள் ஊடக வலிமை பொருளாதார வலிமை என இருந்தும், நேர்மை இன்மை காரணமாக தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல் பயந்து கூட்டணிக்கு தேடுகிறது. நான்கு கட்சிகளின் கொள்கைகளையும் மாற்றும் இல்லை. ஆனால் நாங்கள் மக்களை முழுமையாக நம்பி இறங்கி உள்ளோம்.
இதன்பின் செய்தியாளிடம் பேசுகையில் , தேர்தல் புறக்கணிப்பு என்பதை தவிர்த்து விட்டு தங்களது பிரச்சனைகளை முன்னின்று தீர்வு காணும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார். கடும் வெயிலிலும் பொருட்படுத்தாது தீவிர தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்ட போதும் அக்கட்சி தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.