விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை - புஸ்ஸி ஆனந்த் சூசகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை -  புஸ்ஸி ஆனந்த் சூசகம்

புஸ்ஸி ஆனந்த்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடவில்லை என தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூசகமாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த் , விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்களா என்ற கேள்விக்கு , தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அறிக்கை மூலம் 2026 ம் ஆண்டு தான் எங்கள் இலக்கு என்று தெளிவாக சொல்லி இருப்பதாகவும் கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியில்லை புஸ்ஸி ஆனந்த் சூசகமாக தெரிவித்தார் .

இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ள நிலையில் கூட்டணி குறித்து தளபதி விஜய் தான் அறிவிப்பார் என்றார். விஜய் எப்போது மக்கள் சந்திப்பார் குறித்து முறையாக அறிவிப்பு வரும் என ற புஸ்ஸி ஆனந்த் , மாநாடு நடைபெறுவதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருவதாகவும் , விரைவில் எந்த பகுதியில் மாநாடு நடைபெறும் என முறையாக அறிவிப்பு வரும் என்றார். கடந்த 30 ஆண்டுகளாமாக மக்கள் சேவை பணி செய்து வருவதால் 2026ம் ஆண்டு தேர்தலில் சேவைக்கு உண்டான பலன் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்றார்.

Tags

Next Story