நாமக்கலில் மதுபானக்கடைக்கு இந்தியில் அறிவிப்பு பலகை: அமைச்சர் பதில்

நாமக்கலில் மதுபானக்கடைக்கு  இந்தியில் அறிவிப்பு பலகை:  அமைச்சர் பதில்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் 

மதுபானக்கடைக்கு அறிவிப்பு பலகையை இந்தியில் வைத்தத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

காலிங்கராயன்பாளையத்திலுள்ள காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சு.முத்துசாமி , அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் 1045 குளங்களுக்கும் நீர் நிரப்பி பரிசோதனை முடிவடைந்து விட்டதாகவும் , இத்திட்ட காலதாமத்திற்கு தமிழக அரசு காரணம்.அல்ல என்றார்.

நாமக்கலில் மதுபானக்கடைக்கு இந்தியில். அறிவிப்பு பலகையை துறை அதிகாரிகள் வைத்திருக்க மாட்டார்கள் எனவும் இது தொடர்பாக விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியில் போர்டு வைக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்தப்பகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என நினைத்து இந்தியில் அறிவிப்பு பலகையை அதிகாரிகள் வைத்திருக்கலாம் .

தெரியாமல் வைத்திருப்பார்கள். தெரியாமல் சட்டத்தை மீறக்கூடாது.தெரிந்து செய்தாலும் , தெரியாமல் செய்தாலும் தண்டனை தான் என்றார். சட்டவிரோதமாக மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , நேரம் கடந்து மதுபானங்களை விற்ற 100 க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

Tags

Next Story