லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வெளியிடப்பட்ட நோட்டீஸ்
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு
சேலம் மாவட்டம், காட்டுபட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் நோட்டீஸ் அளித்ததுள்ளனர்.
இலுப்பூர் அருகே காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் வெளியிடப்பட்ட நிலையில் இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
Next Story