லோக்சபா தேர்தல் முடியும் வரை பாட்டிலில் பெட்ரோல் வழங்கக் கூடாது என அறிவிப்பு.....

லோக்சபா தேர்தல் முடியும் வரை பாட்டிலில் பெட்ரோல் வழங்கக் கூடாது என அறிவிப்பு.....

பங்க்

காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் 'பங்க்'களில், பாட்டிலில் பெட்ரோல் வழங்கக் கூடாது'என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் சார்பில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில், 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலின்போது பிரச்னை செய்ய வாய்ப்புள்ள நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, 'காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் 'பங்க்'களில், பாட்டிலில் பெட்ரோல் வழங்கக் கூடாது'என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, பெட்ரோல் 'பங்க்'களில் இருந்து மர்ம நபர்கள் யாராவது பாட்டில் மூலம் பெட்ரோல் வாங்கி சென்று, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் 'பங்க்'களில், காவல்துறை உத்தரவுப்படி, தேர்தல் முடியும் வரை பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டி.எஸ்.பி., முரளி கூறியதாவது: பெட்ரோலை வாங்கி தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். முகாந்திரம் இல்லாத நபர்கள், வாகனம் இல்லாத நபர்களுக்கு கொடுக்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறோம். பெட்ரோல் இல்லாமல் வாகனங்களை எடுத்து வருவோருக்கு சரிபார்த்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை தவிர்க்க நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story