மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு
பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.இதில் அமைப்பின்தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக கூறியவர் 30 வகையான மின் கட்டண உயர்வு ஏற்படுத்தி உள்ளதாகவும் அதில் நாங்கள் முன் வைப்பது ஐந்து வகையான கட்டண குறைவுக்கான கோரிக்கை தான் என்றார்.
முதல்வரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருவதாகவும் சிறுகுறு தொழில்களை பாதுக்காக்க கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்.430 சதவீதத்திற்கு நிலைக்கட்டணத்திற்கு கட்டணம் உயர்ததப்பட்டுள்ளது எனவும் மாதாந்திர கட்டணமும் உயர்த்தபட்டுள்ளதால் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் ஆபரணங்களை அடமானம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்தார் தந்தி அனுப்புவது,கடை அடைப்பு,சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாக கடந்த 118 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக கூறினார்.
நாளை தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக கூறியவர் இதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் தொழில்த்துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருவதாகவும் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமே தவிர இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் தொழில்துறையினரின் வாழ்வாதார பிரச்சனையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது என்றவர் முதல்வரின் கவனத்திற்கு இதை எடுத்து சென்று அரசு தீர்வு காண வேண்டும் என கேட்டு கொள்வதாகவும் தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுக,பாஜக,பாமக,நாம் தமிழர் கட்சி,கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினர் அறிக்கை வெளியிட்டு உள்ளதாகவும் மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்க உள்ளதாகவும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் கொண்டு வராது பற்றி தெரியவில்லை என்றும் ஆனால் எதிர்கட்சி தலைவர் தொழில் துறையினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் என தெரிவித்தார்.