திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

X
கடம்பூர் செ.ராஜூஎம்.எல்.ஏ
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் மார்ச் 04ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் மார்ச் 04ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் செ.ராஜூஎம்.எல்.ஏ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விடியா தி.மு.க அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், தமிழகம் போதைப்பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை 04.03.2024 அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர் திடலில் எங்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
