கிராம மக்கள் போராட்ட அறிவிப்பு - அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு
காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் உள்ள 12வது வார்டில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி, தெருக்களில் மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஊராட்சி அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பிடிஓ பாலமுருகன் அரசு அலுவலர்களுடன் நேரில் வந்து அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஷபியுல்லா,திமுக நகர செயலாளர் கோவர்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மோகன்,துரைமாமது, அதிமுகா ஒன்றிய செயலாளர் திருமால்,விசிக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,ஊராட்சி தலைவர் ரேணு ஆகியோருடன் பேச்சு வார்த்தைநடத்தினார்.அப்போது பொதுமக்களின் கோரிக்கையின் படி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாகவும், மற்றவற்றை படிப்படியாக சரிசெய்து தருவதாகவும் உறுதி அளித்தார். இதனை ஏற்று பொது மக்கள் கலைந்து சென்றனர். ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story