பழைய பாடத்திட்டத்திற்கு முடிவு மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு

பழைய பாடத்திட்டத்திற்கு முடிவு மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு

கோப்பு படம் 

பழைய பாடத்திட்டத்திற்கு முடிவு என மண்டல இணைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத்திட்டம் வரும் டிச.2025ம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இது குறித்து மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திகுறிப்பு; விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்,

கடந்த 2022ம் ஆண்டு முதல் 10 பாடங்கள் கொண்டு 2 பருவமுறையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு மேலாண்மை பட்டப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் 7 பாடங்கள் கொண்ட பழைய பாடத்திட்டம் செயல்படத்தப்படாது. கடந்த காலங்களில் இதுவரை எழுதிய பாடங்களில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் மற்றும் இறுதித் தேர்வுகளில் கலந்து கொள்ள தவறிய பயிற்சியாளர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த இறுதி வாய்ப்பினை தவறினால் இனி வரும் காலங்களில் மீண்டும் பழைய பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுத அனுமதிக்கபடமாட்டாது. புதிய பாடத்திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டயச் சான்றிதழ் பெற முடியும்.

இதுவரை தேர்ச்சி பெறாதோர் எவரேனும் இருப்பின் பயிற்சி நிலையத்தை உடனடியாக அணுகி துணைத் தேர்விற்கான விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விழுப்புரம் வழுதரெட்டி எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story