ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ்
ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்
கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து 30 மேற்பட்ட கடைகளை கட்டியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு பாசன வாய்க்கால் ஆக்கிர மிப்புகளை அகற்ற அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்கு தடைக்கோரி முத்துசாமி மனைவி சரோஜினி என்ப வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனால், ஆக்கிரமிப்பு அகற் றும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சரோஜினி தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, 8 வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையொட்டி, பாசன வாய்க்காலினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளில் நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.