பிரபல கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
ரமேஷ் (எ) ராமையா
பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி செய்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சொர்ணம் என்பவரின் மகன் ரமேஷ் (எ) ராமையா(38) என்பவல் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ரமேஷ் (எ) ராமையா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். ரமேஷ் (எ) ராமையா மீது தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 75 க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story