பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி நாள்

பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி நாள்

மாவட்ட ஆட்சியர்


பெரம்பலூர் மாவட்டத்தில் திருந்திய பாரத பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2023-24 ராபி சிறப்பு பருவ பயிரான நெல் சம்பா பயிரினை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2023 மற்றும் செலுத்த வேண்டிய பீரிமியத் தொகை ஏக்கருக்கு ரூ.567 ஆகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் விண்ணப்பிக்கும்பொழுது இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்த்திட முன்கூட்டியே விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்.கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story