முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் !

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் !

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் என மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.  

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் என மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்குப்பதிவு செய்வதற்காக, 32 -மதுரை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளிலும் படிவம் 12D மூலம் வாக்கு செலுத்த 1199 (85+ மூத்த குடிமக்கள் 875, மாற்றுத்திறனாளிகள் 324) வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்காக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 25 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி குழுவில் நுண் பார்வையாளர், மண்டல அலுவலர்கள், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் (Gazetted Officer), புகைப்பட கலைஞர் மற்றும் காவலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேற்படி குழுவானது மதுரை மாவட்டத்தில் 06.04.2024, 07.04.2024 மற்றும் 08.04.2024 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரிப்பார்கள் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story