திமுக வார் ரூமை திறந்து வைத்த என்.ஆர்.இளங்கோ எம்.பி
திறப்பு விழா
நாகை மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான (WAR ROOM) கட்டளை மையத்தை நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் தலைமையில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. திறந்து வைத்தார்.
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க நாகை மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில்நாகை திமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான (WAR ROOM) கட்டளை மையத்தை நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என் கௌதமன் தலைமையில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி.மற்றும் சட்டத்துறை இணைச் செயலாளர் .கே.எஸ்.ரவிச்சந்திரன் எம் எல்.ஏ.. மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர் செய்திதொடர்பாளர் சூர்யா வெற்றிக்கொண்டான் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.. இந்நிகழ்வில் நாகை மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.தினேஷ்குமார் அவர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Next Story