NSK நகரில் விற்பனை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரில் ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு.
Karur King 24x7 |31 Aug 2024 12:26 PM GMT
NSK நகரில் விற்பனை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரில் ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு.
NSK நகரில் விற்பனை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரில் ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், விற்பனை செய்யும் நோக்கோடு கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக மது விலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகஸ்ட் 29ஆம் தேதி மதியம் 12 மணியளவில், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வெங்கமேடு என் எஸ் கே நகர், எஸ்பிஐ ஏடிஎம் பின்புறம் உள்ள முள் தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, இதில், கரூரை அடுத்த காந்திகிராமம் தமிழ் நகரைச் சேர்ந்த மனோஜ் என்கிற மண்ட மனோஜ் மற்றும் சஞ்சித் வயது 20, ஆகிய இருவரும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும்,இது தொடர்பாக சஞ்ஜித்தை கைது செய்த போது, மனோஜ் என்கிற மண்ட மனோஜ் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சஞ்சித்தை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story