தடங்கம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தொன் போஸ்கோ கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட துவக்கவிழா, தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ExMLA தலைமையேற்று துவக்கி வைத்தார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தடங்கம் ஊராட்சியில் தொன்பாஸ்கோ கல்லூரியின் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் துவக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில், திமுக மாணவரணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், மருத்துவர் அணி துணைத்தலைவர் இளஞ்செழியன், பொறியாளரணி மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பழனிசாமி, கலை, மகேஷ் மற்றும் திமுக நிர்வாகி்கள், ஊர் பொதுமக்கள், கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story