திருப்புல்லாணியில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி

திருப்புல்லாணியில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த  பண்ணையம் பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி


திருப்புல்லாணியில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மற்றும் தொழில்நுட்ப சார்பில் மேலாண்மை முகமை திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திணைக்குளம் ஊராட்சியில் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.தினைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிகப்பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் இராமநாதபுரம் பேராசிரியர் முனைவர் பாலாஜி மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்துவது குறித்தும், மீன் வளர்ப்பு பற்றியும், ஆடு, மாடு, கோழி மற்றும் புறா வளர்ப்பு பற்றியும், மண்புழு உரம் உற்பத்தி, மரக்கன்றுகள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு பற்றியும், அசோலா உற்பத்தி மற்றும் தீவன பயிர்களின் முக்கியத்துவம் பற்றியும், ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி நிலையம் பேராசிரியர் முனைவர் விஜய லிங்கம் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரு மடங்காக உயர்வதற்கு உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்றும். ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் விளக்கினார். மேலும் கோழி முட்டை , வாத்து முட்டை மூலம் வருமானம் பெறுவது குறித்தும் காடை வளர்ப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார் .அதனை தொடர்ந்து திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் எம்.கே. அமர்லால் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மண்வளம், மண்வள மேலாண்மை, உரம் மேலாண்மை, உழவன் செயலியின் நன்மைகள், வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நுண்ணூட்டத்தின் பயன்பாடு உயிரி உரம் பசுந்தாள் உரத்தின் பயன்பாடுகள் பற்றியும் காளான் வளர்ப்பு குறித்தும் எடுத்துரைத்தார். நெல் பயிர் காப்பீடு குறித்தும் நவம்பர் 15 க்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவன அலுவலர்கள் கோகுல் இராகேஷ், ஜீனோஜ் ஆகியோர் விளக்கி கூறினர். மேலும் நெல் ஒரு ஏக்கருக்கு காப்பீடு பிரிமியம் ரூ 361.50 செலுத்த வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் சையத் முஸ்தபா விவசாயிகள் கடன் அட்டை பெறுவது குறித்து விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ச. ஜோசப் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் தவமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் நெல் பயிர் காப்பீடு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story