ஒரே நாளில் 200 இடங்களில் சர்வதேச நிலவு நோக்கு நாள்

X
நிலவை பார்க்கும் நிகழ்வு
சர்வதேச நிலவு நோக்கு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் டெலஸ்க்கோப் மூலம் நிலவை பார்க்கும் நிகழ்வு நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 200 இடங்களில் சர்வதேச நிலவு நோக்கு நாள் கடைபிடைக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் தொடர்பான கருத்துக்களை பரப்பிடஅக்-21 சர்வதேச நிலவு நோக்கு நாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள எலைட் பள்ளிகளில் சர்வதேச நிலவு நோக்கு நாள் கடைபிடிக்கப்பட்டது. ஒரே நாளில் 200 இடங்களில் அந்தந்த மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வல்லநாடு எலைட் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் கஜேந்திரபாபு தலைமை வகித்தார். நல்லாசிரியர் சம்பத் சாமுவேல் முன்னிலை வகித்தார். எலைட் பள்ளி மாணவிகளுக்கு டெலஸ்கோப் மூலம் நிலவினை பார்வையிடவும் வானியல் தொடர்பாகவும் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி பயிற்சி அளித்தார். இதில் கல்யாணசுந்தரம், முருகபெருமான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
Next Story
