திமுக தான் எங்களுக்கு பிரதான எதிர்க்கட்சி நாம் தமிழர் வேட்பாளர் பேட்டி
பேட்டி அளித்த போது
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி குரல் கொடுக்கும் எனவும் எங்களுக்கு எதிர்க்கட்சியாக நினைப்பது திமுக தான் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னி வளவன் போட்டியிட நேற்று பிற்பகல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சாந்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் தர்மபுரி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளான காவிரி உபரி நீர் திட்டம், மொரப்பூர் ரயில்வே திட்டம் விரைந்து நடைபெறும் ,சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலத்திற்கு சென்று வேலை செய்யும் தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் திரும்பவும் தர்மபுரிக்கு வரவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும் தங்களுக்கு பிரதான எதிர்க்கட்சியாக நினைப்பது திமுகவை மட்டும் தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .நிகழ்ச்சியின் போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story