சின்னமே இல்லை என்றாலும் எங்களால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்-நாதக வேட்பாளர் கலாமணி!

சின்னமே இல்லை என்றாலும் எங்களால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்-நாதக வேட்பாளர் கலாமணி!

நாதக வேட்பாளர் கலாமணி

நாம் தமிழர் கட்சி எந்த கூட்டம் நடத்தினாலும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய காளப்பட்டி பகுதியில் இருந்து 50 வாகனங்களில் கிளம்பினார். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் மனு தாக்கல் செய்ய வந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்பொழுது காவல்துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் ஒரே நேரத்தில் கட்சி கொடிகளுடன் இவ்வளவு வாகனங்களை அனுமதிக்க முடியாது எனவும் இதற்கு முறையாக அனுமதி பெற்று இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.இதை ஏற்க மறுத்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஐந்து,ஜந்து வாகனங்களாக இடைவெளி விட்டு செல்லும்படி காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக காளப்பட்டி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இவரைத் தொடர்ந்து பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர். சுரேஷ்குமாரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பின்னர் இரண்டு வேட்பாளர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது வேட்பு மனு சிறப்பான முறையில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் நாளை முதல் பிரச்சாரத்தை தீவிரமாக துவங்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.வேட்புமனு தாக்கல் செய்ய நாங்கள் முறையாக வந்த பொழுது காவல்துறை எங்களை தடுத்து நிறுத்தி அராஜகம் செய்ததுடன் பொதுமக்களுக்கு இடையூறு செய்து விட்டனர் எனவும் பிற கட்சிகள் ஊர்வலமாக வரும்பொழுது எதுவும் சொல்வதில்லை என்றவர் மோடி வரும் பொழுது பல இடங்களில் மூடி வைத்திருந்தனர் என வேட்பாளர் கலாமணி தெரிவித்தார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வந்த எங்களை காவல்துறையினர் தொந்தரவு படுத்தினர் எனவும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதற்கு காரணம் காவல்துறை தான் எனவும் தெரிவித்தார்.

நாளை வேட்புமனு தாக்கலுக்கு அண்ணாமலை வரும் பொழுது இப்படித்தான் செய்வார்களா என்பதை பார்க்கலாம் எனவும் ஜனநாயகத்தில் ஒரு கட்சிக்கு மட்டும் உரிமை இருக்கிறது மற்றவர்களுக்கு இல்லை என நினைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.நாம் தமிழர் கட்சி எந்த கூட்டம் நடத்தினாலும் இடையூறு செய்து கொண்டிருப்பதாகவும் தமிழகத்திலேயே மூன்றாவது கட்சி நாங்கள் எனவும் தெரிவித்தார். எல்லா கட்சிகளுக்குமான உரிமையை எங்களுக்கு கொடுக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் போராடி பெற வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.நாங்கள் வளர்ந்து வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும் சின்னமே இல்லை என்றாலும் எங்களால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எனவும் ஒரு மணி நேரத்தில் இந்தியா முழுக்க எங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர்.சுரேஷ் குமார் சின்னம் என்பது வாக்காளர்கள் பட்டியலில் பார்த்து செலுத்த வேண்டிய ஒரு வழிமுறை அதை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் எனவும் எங்களுக்கான சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் நாங்கள் அது கிடைக்கும் என காத்திருக்கிறோம் அதுவரை வேற யுத்திகளில் பிரச்சாரம் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு எங்களிடம் ஐடி விங் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சி இருந்துள்ளது இந்த ஆட்சியில் மாநில சுய உரிமைகளை இழந்திருக்கிறோம் என்ற அவர் அடக்குமுறை அதிகமாக இருப்பதாகவும் மக்களை பிரித்து ஆளக்கூடிய சூழல் இருந்து வருகிறது எனவும் மக்கள் விரோத போக்குகளை இந்த தேசிய கட்சிகள் கடைபிடித்து வருகின்றன எனவும் தெரிவித்தார். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி இதுதான் நாம் தமிழர் கட்சி கொள்கை எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Tags

Next Story