சாராய தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் சாராயக்கடையை மூடமாட்டார்கள்

சாராய தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் சாராயக்கடையை மூடமாட்டார்கள்

காளியம்மாள் பிரசாரம்  

மதுபான தொழிற்சாலைகளை திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் வைத்திருப்பதால் அவர்கள் மதுக்கடைகளை மூட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் சீர்காழியில் உரையாற்றும்போது, "40 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி திமுக அதிமுக காங்கிரசை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து இதுவரை எதுவும் செய்யவில்லை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது அந்த ஆயிரம் ரூபாய் எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா டாஸ்மார்க் நடத்தி உங்களிடமிருந்து மாதம் 12 ஆயிரம் பெற்றுக் கொண்டு 11 ஆயிரத்து ஸ்டாலின் அரசு எடுத்துக் கொண்டு மீதி ஆயிரம் ரூபாயை உங்களிடம் வழங்குவதாக தெரிவித்தார்.

50 வருடங்களாக நீங்கள் ஏழையாகத்தான் இருக்கிறீர்கள் உங்களிடம் வாக்கு வாங்கினவர்கள் தற்போது ஏழையாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். அரசியல்வாதி வீடுகளில் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் கூட நமக்கு முழுமையாக கிடைப்பதில்லை மைக் சின்னத்தில் போட்டியிடும் காளியம்மா என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் நான் ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் வெற்றி பெற்ற பின் உங்களுக்காக உழைப்பேன் என தெரிவித்தார். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பவர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க நினைப்பவர்கள் என தெரிவித்தார். இந்த தேர்தலில் அதிமுகவினர் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறார்கள் .

அதிமுக கட்சி இருக்கிறதா என்பதை யாருக்கும் தெரியவில்லை யாரிடம் இருப்பது என்றும் தெரியவில்லை. மதுபான கடையை திமுகவோ காங்கிரஸோ மூடுவதற்கு வாய்ப்பு இல்லை அதிமுகவும் மூடுவதற்கு வாய்ப்பு இல்லை மதுபானம் உற்பத்தி செய்யும் ஆலைகள் அனைத்தும் இவர்களிடமே இருப்பதால் மூடுவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். திமுகவை சேர்ந்த அக்கா கனிமொழி மயிலாடுதுறை மாவட்டத்தில் 1500 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு பன்னிக்குட்டியின் விலை 5000 ரூபாய் ஒரு நாய் பத்தாயிரம் ரூபாய் ஆடு 15 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது ஆனால் உங்கள் தலைக்கு விலை என்ன ஆயிரம் ரூபாயா என கேள்வி எழுப்பினார். மனிதனை மனிதனாக பார்க்காமல் தலைக்கு ஆயிரம் ரூபாய் என பார்க்கும் அந்த ஆயிரம் ரூபாய் நல்ல கல்வியை கொடுக்குமா நல்ல மருத்துவத்தை கொடுக்குமா என கேள்வி எழுப்பினார்.தமிழக முதல் உடல்நிலை சரியில்லை என்றால் துபாய் செல்கிறார் சிகிச்சைக்காக ஆனால் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் அங்கும் மருத்துவத்திற்கு தேவையான உபகரணம் இல்லாமல் படுக்கை வசதி இல்லாமல் நம் பாதிக்கப்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இதை அனைத்தையும் மாற்ற வேண்டும் என்றால் சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் நியாய விலை கடை அந்தந்த பகுதியில் அமைய வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வாய்ப்பு கொடுங்கள் வெற்றி பெற்று நான். எதுவும் செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என உறுதி அளித்தார். இந்தத் தேர்தல் ஏழைக்கு பணக்காரர்களுக்கும் நடக்கும் சண்டை யார் வெற்றி பெற வேண்டும் என்பதே நீங்களே உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story