சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல். இது வரை 26 பேர் வேட்புமனு தாக்கல்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாசில்தார் அலுவலகத்திலும் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முரளி உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story