ரூ.1000 கொடுத்துவிட்டு 5 ஆயிரம் முறை சொல்லி காண்பிக்கின்றனர் - சீமான்

ரூ.1000 ஐ மகளிர் உரிமைத்தொகை என கொடுத்து 5000 முறை திமுகவினர் சொல்லி காண்பிப்பதாக ஆத்தூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரில்நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீசனை அவருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிரைன் பஜார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது,நிலத்தை காக்க உங்களை நம்பி களத்தில் இருப்பதாகவும் இதுவரை இருந்த கட்சிகள் எத்தனை முறை ஆட்சி செய்துள்ளது என்பதை எண்ணி பாருங்கள் பாஜக பத்தாண்டுகள் ஆட்சி செய்து உள்ளது. அதேபோல் காங்கிரஸ் பத்தாண்டுகள் ஆட்சி செய்து உள்ளது தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள். திமுக மகளிர் உரிமைத் தொகை என ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஐயாயிரம் முறை சொல்லி காண்பிக்கிறார்கள்.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இலவசம் என்ற சொல் எல்லா நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக களத்தில் இருக்கிறோம். இதுவரை இருந்த பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் வாக்கை விற்பது தன்மானத்தை விற்பதற்கு சமம் என தெரிவித்தார். மேலும் ஓட்டு போடப் போற பெண்ணே என பாட்டு பாடி வாக்குச் சேகரத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story