திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

செய்யூர் அருகே திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


செய்யூர் அருகே திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரில் இலத்தூர் வடக்கு ஒன்றியம், நாம் தமிழர் கட்சியினர் சார்பாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை தொடர்ந்து,தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான் போதைப் பொருள்கள் அதிக புழக்கம் உள்ளது என்றும் நாளுக்கு நாள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாகவும், கள்ளத்தனமாக மது பாட்டில்கள் காலை முதலே விற்பனை செய்யப்படுவதாகவும், மரக்காணத்தில் நடைபெற்ற கள்ள சாராயம் பலி சம்பவம் குறித்து இன்று வரை தீர்வு கிடைக்காத நிலையில் சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை அற்று போனதாகவும், சிபிஐ விசாரணை அமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ள வியாபாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து வடக்கு ஒன்றிய செயலாளர் செல்ல.கோதண்டன் தலைமையில், தொகுதி செயலாளர் கிருபாகரன் ஒருங்கிணைப்பிலும் பவுஞ்சூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சினர் பலர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

Tags

Next Story