சங்கிரியில் குடுகுடுப்பை அடித்து நூதன பிரச்சாரம்

சங்கிரியில் குடுகுடுப்பை அடித்து நூதன பிரச்சாரம்

குடுகுடுப்பை அடித்து நூதன பிரச்சாரம் 

சங்ககிரியில் குடுகுடுப்பை அடித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் திமுக கழக பேச்சாளராக இருந்து வருகிறார். இவர் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவின் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6ந் தேதி ஈரோடு மாவட்டம் பெரியார் வீட்டு அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கி திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சேலம் மேற்கு மாவட்ட பகுதியான சங்ககிரியில் முதன் முதலில் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சங்ககிரியில் நூதன முறையில் திமுகவிற்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பேரூந்துகளில் ஏறி குடுகுடுப்பை அடித்தபடி பயணிகளிடம் குறி சொல்பவரை போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என நூதன பிரச்சாரம் செய்தார்.

அப்போது மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த நூதன பிரச்சாரத்தின் போது சங்ககிரி பேரூர் திமுக செயலாளர் முருகன், பேரூராட்சி துணை தலைவர் அருண் பிரபு, பேரூர் கழக துணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன்னிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story