தஞ்சையில் நூதன போராட்டம்

தஞ்சையில்  நூதன போராட்டம்

நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் 

தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

மத்திய அரசு விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் காய்ந்த மாலைகளை அணிந்து கொண்டு திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தில்லியில் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதைக் கைவிட வேண்டும். கர்நாடக அரசு அத்து மீறி காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காய்ந்த மாலைகளுக்கு இணையாக விவசாயிகளின் நிலைமை இருப்பதாகக் கூறி கழுத்தில் காய்ந்த மாலைகளை அணிந்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. ஜெயபால், செயலர் டி. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story